×

ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் பலி?

மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபர் புடினுக்கு எதிராக திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் பிகோஜின் விமான விபத்தில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து சென்ட் பீட்டர்ஸ் பக் நகருக்கு சென்ற ஜெட் விமானம் ஒன்று திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் ஜெட் விமானத்தில் பயணம் செய்த ஏழு பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் உயிரிழந்தனர்.

ஜெட் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பெயர் பட்டியலில் அதிபர் புதினுக்கு எதிராக திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஜின் பெயரும் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ராணுவத்துடன் இணைந்து சண்டையிட வாக்னர் குழு பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்ற உதவிகரமாக இருந்தது ஆனால் திடீரென ரஷ்யா ராணுவம் தங்கள் வேர்களை கொள்வதாக கூறி வாக்னர் குழு கிளர்ச்சியில் ஈடுபட்டது.

ரஷ்யாவின் நகரங்களை ஆக்கிரமித்த வாக்னர் குழு தலைநகர் மாஸ்கோவையும் முற்றுகையிட முயன்றது. ஆனால் பெலாரசு அரசு தலையிட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதை எதிர்த்து வாக்னர் குழு பின்வாங்கியது. அந்த குழுவின் தலைவரும் பெலாரஸ் நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டார். இந்நிலையில் ஜெட் விமான விபத்தில் பிரிகோஜின் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் உள்ளது என்றும் ஆனால் விபத்தில் பலியானவர்களில் பிரிகோஜின் உடல் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

The post ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் பலி? appeared first on Dinakaran.

Tags : Wagner group ,Chancellor ,Newt ,Russia ,Prigogin ,Moscow ,President Putin ,Pikogin ,Wagner ,Mt ,Prigozin ,Dinakaran ,
× RELATED பெரியார் பல்கலையில் பல்வேறு...